கோல் மழை பொழிந்து செல்சியைப் புரட்டிப்போட்ட ஆர்சனல்

கோல் மழை பொழிந்து செல்சியைப் புரட்டிப்போட்ட ஆர்சனல்

1 mins read
70ebe5a0-212b-41c5-a357-7444049fef82
ஆர்சனல் தற்காப்பு ஆட்டக்காரர் பென் வயிட் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. ஆர்சனலின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் செல்சி திக்குமுக்காடியது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் செல்சியை 5-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் பந்தாடியது.

ஆர்சனலுக்காக காய் ஹாவெர்ட்ஸ் மற்றும் பென் வயிட் தலா இரண்டு கோல்களும் லியேன்ட்ரோ டுரோசார்ட் ஒரு கோலும் போட்டனர்.

ஆர்சனலின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் செல்சி திக்குமுக்காடியது.

இந்த ஆட்டம் ஏப்ரல் 23ஆம் தேதியன்று நடைபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 34 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள நிலையில், 77 புள்ளிகள் பெற்று லீக் பட்டியலில் ஆர்சனல் முன்னிலை வகிக்கிறது.

லீக் பட்டத்துக்குக் குறிவைத்திருக்கும் லிவர்பூலுக்கும் மான்செஸ்டர் சிட்டிக்கும் இது நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது.

லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள லிவர்பூல் 33 ஆட்டங்களில் களமிறங்கி 74 புள்ளிகள் பெற்றுள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ள சிட்டி, 32 ஆட்டங்களில் விளையாடி 73 புள்ளிகளைக் குவித்துள்ளது.

செல்சி, 32 ஆட்டங்களில் களமிறங்கி 47 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துஆர்சனல்செல்சி