டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஷமி இல்லை

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஷமி இல்லை

1 mins read
f0cdf82e-997c-441f-bda1-33e6a651fd54
இந்தியாவுக்காக கடைசியாக உலகக் கிண்ண ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷமி, அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். - படம்: ஐஏஎன்எஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: தற்போது கணுக்கால் அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைந்துவரும் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி, இவ்வாண்டு செப்டம்பரில் பங்ளாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட், டி20 தொடரில் இடம்பெறக்கூடும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

எனவே, வரும் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஷமி பங்குபெறுவதற்கு வாய்ப்பில்லை.

இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் நிறைவுபெற்ற ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஷமி, 33, இடம்பெறவில்லை.

இந்தியாவுக்காக கடைசியாக உலகக் கிண்ண ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷமி, அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

வரும் செப்டம்பரில் பங்ளாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 அனைத்துலகப் போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது.

குறிப்புச் சொற்கள்