தடுமாறி எழுந்த ஆர்சனல்

தடுமாறி எழுந்த ஆர்சனல்

1 mins read
f10b8b27-3d2e-4c22-8301-f28d6be2df4b
பிரென்ட்ஃபர்டுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கோலைப் போட்ட ஆர்சனலின் கய் ஹாவர்ட்ஸ். - படம்: இபிஏ
Google News Preferred Icon

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் தடுமாறி பிரென்ட்ஃபர்டை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது ஆர்சனல்.

இந்த ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடியவிருந்த நேரத்தில் 86வது நிமிடத்தில் ஆர்சனலின் கய் ஹாவர்ட்ஸ் வெற்றி கோலைப் போட்டார். முன்னதாக ஆர்சனல் கோல் காப்பாளர் ஏரன் ராம்ஸ்டேல் செய்த தவற்றால் பிரென்ட்ஃபர்டின் யோவென் விஸ்ஸா கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

முற்பாதியாட்டத்தில் டெக்டன் ரைஸ் ஆர்சனலை முன்னுக்கு அனுப்பினார்.

ஜனவரி மாதம் துபாயில் பயிற்சிகளில் ஈடுபட்ட ஆர்சனல் அதிலிருந்து அபாரமாக விளையாடி வந்துள்ளது. அதற்குப் பிறகு லீக்கில் 33 கோல்களைக் குவித்து நான்கு கோல்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருக்கிறது ஆர்சனல்.

அடுத்ததாக செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 12) ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆர்சனல், போர்க்சுகலின் போர்ட்டோவைச் சந்திக்கவுள்ளது. லீக்கில் இம்மாதம் 31ஆம் தேதியன்று லீக் பட்டத்தை வெல்லத் தீவிரமாக இறங்கியிருக்கும் மற்றொரு குழுவான மான்செஸ்டர் சிட்டியுடன் மோதவுள்ளது ஆர்சனல்.

சனிக்கிழமை (மார்ச் 9) நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் எவர்ட்டனை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது மான்செஸ்டர் யுனைடெட். ஆட்டத்தின் இரண்டு கோல்களும் பெனால்டி வாய்ப்புகளின் மூலம் விழுந்தன.

குறிப்புச் சொற்கள்