ஹாலண்ட் அசத்தல்: லூட்டனைப் பந்தாடிய மேன்சிட்டி

ஹாலண்ட் அசத்தல்: லூட்டனைப் பந்தாடிய மேன்சிட்டி

1 mins read
d6299c48-a786-4d9b-9100-83a6903fc856
ஐந்து கோல்களைப் போட்ட எர்லிங் ஹாலண்ட். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

லூட்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ண காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தில் லூட்டன் டவுனை 6-2 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி புரட்டிப்போட்டது.

இந்த ஆட்டம் பிப்ரவரி 27ஆம் தேதியன்று நடைபெற்றது.

மான்செஸ்டர் சிட்டிக்காக அதன் நட்சத்திர ஆட்டக்காரர் எர்லிங் ஹாலண்ட் ஐந்து கோல்களைப் போட்டார்.

இந்த வெற்றியின் மூலம் காலிறுதி ஆட்டத்துக்கு சிட்டி தகுதி பெற்றுள்ளது.

மற்றோர் ஆட்டத்தில் பிளாக்பர்ன் ரோவர்ஸ் குழுவை பெனால்டி ஷுட்அவுட் முறைப்படி நியூகாசல் யுனைடெட் தோற்கடித்தது.

இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையிலான ஆட்டம் 1-1 என்று சமநிலையில் முடிந்ததை அடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஹுட்அவுட் நடத்தப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் நியூகாசல் காலிறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்
காற்பந்து

தொடர்புடைய செய்திகள்