காற்பந்து: தொடர்ந்து அசத்தும் ரொனால்டோ

காற்பந்து: தொடர்ந்து அசத்தும் ரொனால்டோ

1 mins read
24e2c3ed-dc2d-4adb-9fd0-ee39933f6af3
38 வயது ரொனால்டோ ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.  - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

லிஸ்பன்: காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து அசத்தி வருகிறார்.

யூரோ கிண்ணத்திற்கான தகுதி ஆட்டத்தில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி லிச்டென்ஸ்டினை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

38 வயது ரொனால்டோ ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். அதன் பின்னர் 57வது நிமிடத்தில் போர்சுகல் மீண்டும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை தன் வசப்படுத்தியது.

இந்த வெற்றியின் மூலம் பிரிவு ‘ஜே; புள்ளிப்பட்டியலில் 27 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது போர்சுகல்.

யூரோ கிண்ணம் 2024 தகுதி ஆட்டத்தில் அதிக கோல் அடித்த வீரர் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார் ரொனால்டோ. இதுவரை அவர் 10 கோல்கள் அடித்துள்ளார்.

அனைத்துலக காற்பந்து விளையாட்டில் அதிக கோல் அடித்தவர்கள் வரிசையிலும் ரொனால்டோ முன்னிலை வகிக்கிறார். 204 ஆட்டங்களில் விளையாடியுள்ள ரொனால்டோ 128 கோல்கள் அடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துரொனால்டோ