காற்பந்து: முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கும் ஸ்பர்ஸ்

காற்பந்து: முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கும் ஸ்பர்ஸ்

1 mins read
187b97cb-5c1a-4b14-9064-08f6def60829
ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் அணித் தலைவர் சன் ஹூங் மின், ஸ்பர்சுக்கு இரண்டாவது கோலை அடித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

லண்டன்: இந்தப் பருவத்தின் இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டியில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் குழுவின் வெற்றி நடை தொடர்கிறது.

கிறிஸ்ட்டல் பேலஸ் குழுவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அது வெற்றிபெற்றது.

ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் கிறிஸ்ட்டல் பேலஸ் வீரர் ஜோயல் வார்ட் தவறுதலாக தன் அணிக்கு எதிராகவே கோல் அடித்தார். அதன் பின்னர் 66வது நிமிடத்தில் அணித் தலைவர் சன் ஹூங் மின் ஸ்பர்சுக்கு இரண்டாவது கோலை அடித்தார்.

இந்தப் பருவத்தில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்பர்ஸ் எட்டு ஆட்டங்களில் வெற்றியும் 2 ஆட்டத்தில் சமநிலையும் கண்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11:30 மணிக்கு மான்செஸ்டர் சிட்டியும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் மோதுகின்றன.

இரு அணிகளும் வெற்றிபெற போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கக்கூடும்.

கடந்த ஜூன் மாதம் எஃப் கிண்ணத்தில் இரு அணிகளும் மோதின. அதில் சிட்டி 2 -1 என்று வெற்றிபெற்றது.

சனிக்கிழமை நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மான்செஸ்டர் சிட்டி (21), மூன்றாவது இடத்தில் ஆர்சனலும் (21) உள்ளன.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துஸ்பர்ஸ்