இர்பான் பதானுடன் நடனமாடிய ரஷீத் கான்

1 mins read
623bb240-3d6e-4017-aa71-2bb85e755c4c
படம்: - சமூகஊடகம்

சென்னை: பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஆட்டம் முடிந்த பிறகு தங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு விளையாட்டரங்கில் வலம் வந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

அப்போது தொலைக்காட்சிக்கு வர்ணனை செய்துகொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ரஷீத் கானுடன் நடனமாடத் தொடங்கினார்.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

இன்ஸ்டகிராமில் மட்டும் 2 மில்லியனுக்கு அதிகமான விருப்பக் குறிகளை அந்தக் காணொளி பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக செயல்படும் அஜய் ஜடேஜாவின் முக்கியத்துவத்தை இந்த வெற்றி உணர்த்துவதாகவும் சச்சின் குறிப்பிட்டார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்