இன்டர் மயாமி குழுவை விட்டு விலகப்போவதில்லை: மெஸ்ஸி

இன்டர் மயாமி குழுவை விட்டு விலகப்போவதில்லை: மெஸ்ஸி

1 mins read
2fa8e1b3-004d-48ab-8cfc-168fd8eef928
படம்: - ஏஎஃப்பி
Google News Preferred Icon

மயாமி: காற்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி இன்டர் மயாமி குழுவில் தொடர்ந்து நீடிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். தாம் எந்தக் குழுவுக்கும் செல்லப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அண்மையில் இன்டர் மயாமி குழுவை விட்டுவிட்டு மெஸ்ஸி பார்சிலோனா குழுவுக்கு செல்லக்கூடும் என்று தகவல்கள் பரவின. அதைத்தொடர்ந்து மெஸ்ஸியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் எம்எல்எஸ் காற்பந்து அணியான இன்டர் மயாமி அணியில் இணைந்தார் மெஸ்ஸி.

தடுமாறிக்கொண்டிருந்த அந்த அணிக்கு மெஸ்ஸி விளையாடத் தொடங்கியதில் இருந்து வெற்றிகள் குவியத்தொடங்கின.

இதுவரை இன்டர் மயாமிக்கு 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 11 கோல்கள் அடித்துள்ளார். 8 முறை கோல் அடிக்க அவர் உதவியுள்ளார்

டிசம்பர் மாதத்தில் ஓய்வு எடுத்துவிட்டு, ஜனவரி மாதம் முதல் அடுத்த பருவத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளவிருப்பதாக மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துமெஸ்ஸி