ஹாக்கி: பாகிஸ்தானை விளாசிய இந்தியா

ஹாக்கி: பாகிஸ்தானை விளாசிய இந்தியா

1 mins read
7b9850e9-97f3-4d9e-beea-1b860ad241df
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் மன்தீப் சிங் (இடம் நீலநிற சீருடையில்) பந்தை அடிக்கிறார். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

சென்னை: 7வது ஆசிய வெற்றியாளர் விருது ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்தது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் இரண்டு கோல்கள் போட்டு அசத்தினர்.

இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் 13 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறியது. அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டு

தொடர்புடைய செய்திகள்