200 மீ ஓட்டப் பந்தயம்: இறுதிச்சுற்றுக்கு சாந்தி பெரேரா தகுதி

200 மீ ஓட்டப் பந்தயம்: இறுதிச்சுற்றுக்கு சாந்தி பெரேரா தகுதி

1 mins read
629b78bd-8dd7-49aa-8da2-f1440921a316
அரையிறுதியில் சாந்தி 200 மீட்டர் தூரத்தை 23.51 வினாடிகளில் ஓடி முடித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பேங்காக்: சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா ஆசியத் திடல்தடப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அரையிறுதியில் சாந்தி  200 மீட்டர் தூரத்தை 23.51 வினாடிகளில் ஓடி முடித்தார்.

இந்திய வீராங்கனை யாராஜி ஜோதி 23.29 வினாடிகளில் ஓடி அரையிறுதியில் முதலிடம் பிடித்தார். ஜப்பானிய வீராங்கனை ரெமி சுருடா (23.47 வினாடிகள்) இரண்டாவது இடத்தில் முடித்தார். சாந்திக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.

அண்மையில் நடந்து முடிந்த தென்கிழக்காசிய போட்டியில் சாந்தி 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 22.69 வினாடிகளில் ஓடி முடித்தார்.

இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

வெள்ளிக்கிழமை நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் சாந்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அவர் 11.20 வினாடிகளில் ஓடி தேசிய சாதனை படைத்தார்.

குறிப்புச் சொற்கள்