விம்பிள்டன் பொதுவிருது: அரையிறுதிக்கு முன்னேறிய முன்னணி நட்சத்திரங்கள்

1 mins read
b07ebb15-17b2-465f-8d04-9c5e723672bd
படம்: - ஏஎஃப்பி

விம்பிள்டன் பொதுவிருதின் ஆடவர் பிரிவுக்கான அரையிறுதிக்கு முன்னணி வீரர்களான நோவாக் ஜோக்கோவிச், அல்கட்ராஸ் கார்ஃபியா, டேனில் மெட்வடேவ், ஜானிக் சின்னர் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் வெள்ளிக்கிழமை நடக்கின்றன.

முதல் அரையிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள கார்ஃபியாவை மெட்வடேவ் எதிர்கொள்கிறார்.

அந்த ஆட்டத்தைத் தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடக்கும். அதில் ஜோக்கோவிச்சும் சின்னரும் மோதுகின்றனர்.

அரையிறுதியில் வெல்லும் வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதியாட்டத்தில் விளையாடுவார்கள். 

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்