ஆசிய கபடி போட்டி: இந்தியா கிண்ணம் ஏந்தியது

ஆசிய கபடி போட்டி: இந்தியா கிண்ணம் ஏந்தியது

1 mins read
f1a7a60c-66a9-4e13-bc4d-7990e46c88da
தென்கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்ற ஆசிய கபடிப் போட்டியில் வாகை சூடி கிண்ணம் ஏந்திய இந்திய அணி. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

பூசான்: தென் கொரியாவின் பூசான் நகரில் ஆசிய கபடி போட்டி 2023 தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை அரங்கேறியது. இறுதிப்போட்டியில் நடப்பு வெற்றியாளர் ஈரான் மற்றும் முன்னாள் வெற்றியாளரான இந்திய அணிகள் மோதின.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 42-32 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது.

முற்பாதியில் இந்திய அணி 23-11 என்று முன்னிலை பெற்றது. பிற்பாதியிலும் முன்னிலையை தக்கவைத்துக்கொண்டது. இந்திய அணியின் தலைவர் பவன் ஷெராவத் அதிரடியாக விளையாடி புள்ளிகளைச் சேகரித்தார். அவரே இந்த ஆட்டத்தின் நாயகன்.

இந்தத் தொடரில் இந்திய அணி ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்திய அணி ஆசிய கபடி போட்டி கிண்ணத்தை எட்டாவது முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டு