மோசடி: 56,000 வெள்ளிக்கு மெஸ்ஸியுடன் உணவு, தேநீர் விருந்து

1 mins read
a90b3511-6736-45ea-b99f-61a95f99c611
சீனாவில் மெஸ்ஸியின் வருகைக்காக ஆவலாகக் காத்திருக்கும் ரசிகர்கள். படம்: ரசிகர்கள் -

பெய்ஜிங்: அர்ஜென்டினா காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியுடன் உணவு, தேநீர் விருந்து, 'செல்ஃபி'...

இது, எந்த காற்பந்து ரசிகரையும் சுண்டியிழுக்கக்கூடிய வாய்ப்பு.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா அணிகள் மோதவுள்ளன.

அந்த ஆட்டத்தில் விளையாட மெஸ்ஸி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு அவருடன் நேரம் செலவிட வாய்ப்பு வழங்கப்படுவதாக விளம்பரம் தலைதூக்கியுள்ளது.

அதற்கு 300,000 யுவான் (56,000 வெள்ளி) செலவாகும் என்றும் கூறப்படுகிறது.

எனினும், மெஸ்ஸியின் வருகையையொட்டி எழுந்துள்ள பல மோசடிச் செயல்களில் இதுவும் ஒன்று என சீனக் காவல்துறை எச்சரித்துள்ளது.