அமெரிக்கா செல்லும் மெஸ்ஸி

அமெரிக்கா செல்லும் மெஸ்ஸி

1 mins read
73da2045-2ed3-426f-af45-07c661d099aa
சென்ற உலகக் கிண்ணத்தை வென்ற அர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்ஸி. படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

மயாமி: அமெரிக்க காற்பந்துக் குழுவான இன்டர் மயாமியில் சேர்கிறார் அர்ஜென்டினா காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி.

பிரெஞ்சுக் குழுவான பிஎஸ்ஜியிலிருந்து மெஸ்ஸி வெளியேறுவது சில வாரங்களுக்கு முன்பு உறுதியானது.

அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் ஸ்பானிய லீக் குழுவான பார்சிலோனாவில் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதையடுத்து தான் இன்டர் மயாமியில் சேரப்போவதை புதன்கிழமையன்று உறுதிப்படுத்தினார் 35 வயது மெஸ்ஸி.

மெஸ்ஸியின் வருகையை முன்னிட்டு இன்டர் மயாமியின் ஆட்டங்களுக்கான நுழைவுச்சீட்டுகள் 1,034 விழுக்காடு வரை அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.