உலகக் கிண்ணம்: சவூதி தடுமாற்றம், மெக்சிகோ ஏமாற்றம்

உலகக் கிண்ணம்: சவூதி தடுமாற்றம், மெக்சிகோ ஏமாற்றம்

1 mins read
255938d8-f799-4e19-afd1-274c42be6818
படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் 'சி' பிரிவில் தனது முதல் இரு ஆட்டங்களில் சரியாக விளையாடாததற்கான பலனை அனுபவிக்கிறது மெக்சிகோ. இப்பிரிவில் சவூதி அரேபியாவை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது மெக்சிகோ.

எனினும், முதல் இரு ஆட்டங்களில் வெல்லாத அது இரண்டாம் சுற்றுக்கு முன்னேறவில்லை.

44 ஆண்டுகளில் முதன்முறையாக இரண்டாம் சுற்றுக்கு முன்னேறாத மெக்சிகோவின் பயிற்றுவிப்பாளர் ஜெரார்டோ 'டாடா' மார்ட்டினோ பதவி விலகினார்.

'சி' பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை வென்று அதிரச் செய்த சவூதி அரேபியா அதற்குப் பிறகு சோபிக்காமல் போட்டியிலிருந்து வெளியேறுகிறது.