நவம்பர் வரை டோனி இல்லை

நவம்பர் வரை டோனி இல்லை

1 mins read
Google News Preferred Icon

ராஞ்சி: உலகக் கிண்ணப் போட்டிகள் முடிந்ததும் கிரிக்கெட்டுக்குச் சற்று ஓய்வு கொடுத்து, இந்திய ராணுவத்தில் சேர்ந்து கிட்டத் தட்ட இரு மாத காலம் தேசிய சேவையாற்றினார் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடாத அவர், நேற்று முன்தினத்துடன் முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் வரை அவர் கிரிக்கெட் விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அது உண்மையெனில், நவம்பர் மாதம் பங்ளாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் விளையாடமாட்டார். டிசம்பரில் இந்தியா செல்லும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர் ஆடக்கூடும்.