ரோகித் சர்மா: ஒருநாள் போட்டியில் முச்சதம் அடிக்க ஆசை

ரோகித் சர்மா: ஒருநாள் போட்டியில் முச்சதம் அடிக்க ஆசை

1 mins read
Google News Preferred Icon

மும்பை: இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் முதலில் இரட்டை சதம் அடித்தார். 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் இந்தச் சாதனையைப் புரிந்தார். அதன்பிறகு ஐந்து இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டன. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையில் இந்தியாவின் ரோகித் சர்மா உள்ளார். 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ஓட்டங்களும் 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 264 ஓட்டங்களும் எடுத்தார். இந்நிலையில், ஒருநாள் போட்டியில் முச்சதம் அடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ரோகித் சர்மா உள்ளார். "ஒருநாள் போட்டியில் முச்சதம் அடிப்பது என்பது மிகவும் சவாலானது. ஆனால் நான் அதற்கு கடுமையாக முயற்சி செய்வேன்," என்று ரோகித் சர்மா கூறினார்.