நான்காவது போட்டிக்கும் இவரே தலைவர்!

நான்காவது போட்டிக்கும் இவரே தலைவர்!

1 mins read
a3780d20-1000-4c3d-9203-f0d3f8a8d768
படம்:ஏஎஃப்பி -
Google News Preferred Icon

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக வரும் 9ஆம் தேதி தொடங்கவிருக்கும் நான்காவது, கடைசி டெஸ்ட் போட்டிக்கும் ஆஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா சென்றுள்ளது.

இரண்டாவது போட்டி முடிந்ததும் தனிப்பட்ட காரணங்களுக்காக தாய்நாடு திரும்பினார் அவ்வணியின் தலைவர் பேட் கம்மின்ஸ்.

இதனையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தலைவராகச் செயல்பட்டார். முதலிரு போட்டிகளில் தோற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் அவ்வணி வெற்றிபெற்றது.

இந்நிலையில், கம்மின்ஸ் இப்போதைக்கு இந்தியா திரும்பமாட்டார் என்றும் அகமதாபாத்தில் நடக்கும் நான்காவது போட்டிக்கும் ஸ்மித்தே அணியை வழிநடத்துவார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 2-1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது.