உலகக் கிண்ணக் காற்பந்தில் விளையாடவுள்ள தமிழ் வம்சாவளி வீரர்

உலகக் கிண்ணக் காற்பந்தில் விளையாடவுள்ள தமிழ் வம்சாவளி வீரர்

1 mins read
ac401600-4d26-4abd-a6f7-e31b059da39e
ஆண்களுக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் விளையாடும் முதல் தமிழ் வம்சாவளி வீரர் என்னும் பெருமை நி‌‌‌ஷானுக்குக் கிடைத்துள்ளது. - படம்: சாக்கரூஸ்
Google News Preferred Icon

சிட்னி: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நி‌‌‌ஷான் வேலுப்பிள்ளை, 25, விளையாடவுள்ளார். அவர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதன்மூலம் ஆண்களுக்கான உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் விளையாடும் முதல் தமிழ் வம்சாவளி வீரர் என்னும் பெருமை நி‌‌‌ஷானுக்குக் கிடைத்துள்ளது.

நி‌‌‌ஷானின் தந்தை சசிநாத் வேலுப்பிள்ளை இலங்கைத் தமிழர் ஆவார்; தாயார் ஆங்கிலோ இந்தியர். நி‌‌‌ஷான் மெல்பர்னில் பிறந்து வளர்ந்தவர்.

ஆஸ்திரேலியாவின் ஏ-லீக் குழுவான மெல்பர்ன் விக்டரி குழுவிற்காக அவர் விளையாடி வருகிறார்.

திடலில் தாக்குதல் வீரராக விளையாடும் நி‌‌‌ஷான் கோல் அடிப்பதில் சிறப்பாகச் செயல்படக்கூடியவர்.

ஆஸ்திரேலிய அணி ‘டி’ பிரிவில் உள்ளது. அதில் துருக்கி, அமெரிக்கா, பராகுவே ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஆஸ்திரேலியா தனது முதல் ஆட்டத்தில் துருக்கியை எதிர்கொள்கிறது. அது ஜூன் 13ஆம் தேதி வான்கூவர் நகரில் நடக்கிறது.

48 அணிகள் விளையாடும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி ஜூன் 12ஆம் தேதி தொடங்குகிறது. போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் ஏற்று நடத்துகின்றன.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துஉலகக் கிண்ணம்ஆஸ்திரேலியாஇந்திய வம்சாவளி