எகிப்து உலகக் கிண்ண அணித் தலைவராக முகம்மது சாலா நியமனம்

எகிப்து உலகக் கிண்ண அணித் தலைவராக முகம்மது சாலா நியமனம்

1 mins read
1216766c-083d-43b9-92ce-564b092bb2d1
எகிப்து உலகக் கிண்ணக் காற்பந்துத் தலைவராக முகமது சாலா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கெய்ரோ: அடுத்த மாதம் வட மற்றும் மத்திய அமெரிக்காவில் நடைபெறும் 2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பங்கேற்கும் எகிப்தின் இறுதி அணிக்கு, இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான லிவர்பூலின் புகழ்பெற்ற முன்னாள் ஆட்டக்காரரான முகம்மது சாலா தலைமை தாங்குவார் என்று அக்குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஹொசாம் ஹசன் சனிக்கிழமை (மே 30) தெரிவித்தார்.

வளர்ந்து வரும் தாக்குதல் ஆட்டக்காரர் ஹம்சா அப்துல் கரீம் குழுவில் சேர்க்கப்பட்டதைத் தவிர, இந்தக் குழுவில் பெரிய ஆச்சரியங்கள் எதுவும் இல்லை. 18 வயதான இவர், எகிப்தின் முன்னணி அணியான அல் அஹ்லியிலிருந்து, ஸ்பெயினின் லா லிகா வெற்றியாளரான பார்சிலோனா குழுவின் இரண்டாம் நிலை குழுவான பார்சிலோனா அத்லெடிக் அணிக்குத் தற்காலிகமாக அனுப்பப்பட்டார்.

இந்தப் பருவத்தில் தனது குழுவுக்காக 36 ஆட்டங்களில் எட்டு கோல்களை அடித்த மான்செஸ்டர் சிட்டி முன்கள வீரர் உமர் மார்மூஷ், இத்தொடரில் எகிப்தின் தாக்குதலை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ணப் போட்டிகளில் ‘ஜி’ பிரிவில் இடம்பெற்றுள்ள எகிப்து, ஜூன் 15ஆம் தேதியன்று சியாட்டிலில் தனது முதல் ஆட்டத்தில் பெல்ஜியத்தைச் சந்திக்கிறது. அப்பிரிவில் உள்ள இதர நாட்டுக் குழுக்கள் நியூசிலாந்து, ஈரான்.

எகிப்து தனது கடைசி நட்பு ஆட்டத்தை ஜூன் 6ஆம் தேதியன்று ஓஹையோவில் பிரேசிலுக்கு எதிராக விளையாடும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
எகிப்துஈரான்உலகக் கிண்ணம்