ஆஸ்திரேலிய அணித்தலைவராக மேத்யூ வேட் நியமனம்

ஆஸ்திரேலிய அணித்தலைவராக மேத்யூ வேட் நியமனம்

1 mins read
f1577081-95c3-401b-a7c2-4b06b27496e0
மேத்யூ வேட். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

மெல்பர்ன்: இந்திய அணிக்கெதிராக வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடக்கவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் தலைவராக மேத்யூ வேட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ன ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் முடிந்ததும் மிட்செல் மார்ஷ் தாய்நாடு திரும்பவுள்ளார்.

அண்மையில், தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணித்தலைவராக மார்ஷ் செயல்பட்டார்.

பேட் கம்மின்ஸ், கேமரன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட் உள்ளிட்ட வீரர்களும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பின் ஆஸ்திரேலியா திரும்புகின்றனர்.

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளோரில் எட்டுப் பேர், இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடுவர்.

முதல் டி20 போட்டி நவம்பர் 26ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்