விராத் கோஹ்லி - அனுஷ்கா சர்மா இணையருக்கு இரண்டாவது குழந்தை!

விராத் கோஹ்லி - அனுஷ்கா சர்மா இணையருக்கு இரண்டாவது குழந்தை!

1 mins read
84ff7608-ebb4-44d2-be50-520471ad5d2a
அனுஷ்கா-கோஹ்லி இணையருக்கு ஏற்கெனவே மூன்று வயதில் ஒரு மகள் இருக்கிறாள். - படம்: விராத் கோஹ்லி / இன்ஸ்டகிராம்
Google News Preferred Icon

மும்பை: முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, முன்னணி இந்தித் திரையுலக நட்சத்திரம் அனுஷ்கா சர்மா இணையருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இம்மாதம் 15ஆம் தேதியே குழந்தை பிறந்துவிட்ட நிலையில், 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அவ்விவரத்தை அவர்கள் இருவரும் சமூக ஊடகங்கள் வழியாகப் பகிர்ந்துகொண்டனர்.

குழந்தைக்கு அகாய் (Akaay) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அவர்களுக்கு ஏற்கெனவே வாமிகா என்ற மூன்று வயது மகள் இருக்கிறாள்.

“மிகுந்த மகிழ்ச்சியாலும் அன்பினாலும் எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தச் செய்தியை உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வாமிகாவின் குட்டித் தம்பிக்கு அகாய் எனப் பெயரிட்டுள்ளோம். எங்கள் வாழ்வின் இந்த அழகான நேரத்தில் உங்கள் ஆசியையும் வாழ்த்துகளையும் வேண்டுகிறோம்,” என்று கோஹ்லி பதிவிட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தற்போது நடந்துவரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கோஹ்லி பங்கேற்கவில்லை.

குறிப்புச் சொற்கள்