உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஜடேஜா படைத்த புதிய சாதனை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஜடேஜா படைத்த புதிய சாதனை

1 mins read
12b55ef8-b977-4387-8902-3d241070fdd6
இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

லண்டன்: இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலமாக பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 587க்கு ஆல் அவுட்டானது. அடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிவரும் இங்கிலாந்து அணி 2ஆம் நாள் முடிவில் 77/3 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா 89 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம், ஜடேஜா தனது 23வது அரைசதத்தை நிறைவு செய்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2,000க்கும் அதிகமான ஓட்டங்கள் மற்றும் 100க்கும் அதிகமான விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்றை ஜடேஜா நிகழ்த்தியுள்ளார்.

ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஏழாம் நிலை அல்லது அதற்குக் கீழ் வரிசையில் இறங்கி அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் ஜடேஜா, கபில்தேவை சமன்செய்துள்ளார்.

இந்தப் பட்டியலில் டோனி 10 அரைசதத்துடன் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்