ஐபிஎல்: ஜடேஜா அரிய சாதனை

ஐபிஎல்: ஜடேஜா அரிய சாதனை

1 mins read
beadf98a-ed23-4663-9a8c-7c4ff4c25b52
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

சென்னை: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா, குறைந்தது 100 கேட்சுகள், 1,000 ஓட்டங்கள், 100 விக்கெட்டுகள் ஆகிய மூன்று மைல்கற்களையும் எட்டிய முதல் ஆட்டக்காரர் என்ற அரிய சாதனையைப் படைத்துள்ளார்.

கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக திங்கட்கிழமை (ஏப்ரல் 8) இரவு நடந்த போட்டியின்போது 100 கேட்ச் என்ற மைல்கல்லை எட்டினார் 35 வயதான ஜடேஜா.

அவர் இதுவரை 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்; 2,776 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

“எத்தனை கேட்ச் பிடித்துள்ளேன் என்று நான் கணக்கு வைத்துக்கொள்வதில்லை,” என்றார் அவர்.

அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைச் சந்தித்த சென்னை அணி, கோல்கத்தா அணியை வீழ்த்தியதன்மூலம் வெற்றிப் பாதைக்குத் திரும்பியது.

குறிப்புச் சொற்கள்