அரையிறுதியில் இந்திய மகளிரணி

அரையிறுதியில் இந்திய மகளிரணி

1 mins read
f01a241a-a752-45b2-a370-85379c6f4655
கோலடித்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் இந்திய வீராங்கனைகள். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

ஹாங்ஜோ: ஆடவர் அணியைப் போலவே, இந்திய மகளிர் ஹாக்கி அணியும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இந்திய அணி செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் 13-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கை மண்கவ்வச் செய்தது. வந்தனா கட்டாரியா, தீப் கிரேஸ் எக்கா, தீபிகா என மூவர் ‘ஹாட்ரிக்’ கோலடித்தனர்.

‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, மூன்று ஆட்டங்களில் வென்றும் ஓர் ஆட்டத்தில் சமநிலை கண்டும் பத்துப் புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

இதனையடுத்து, வியாழக்கிழமை நடக்கவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் அவ்வணி, ஜப்பான் அல்லது சீனாவை எதிர்த்தாடவுள்ளது.

குறிப்புச் சொற்கள்