இந்தியா-ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்தில் மின்னினார் கவாஜா

இந்தியா-ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்தில் மின்னினார் கவாஜா

1 mins read
5759ff2d-94cc-42dc-91f9-7990b5f694bf
முதல் நாள் ஆட்டத்தில் சதமடித்த ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, சக வீரர் கேமரன் கிரீனுடன் அதைக் கொண்டாடுகிறார். படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா சதமடித்து அசத்தினார்.

இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வியாழக்கிழமை (மார்ச் 9) நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில், நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 255 ஓட்டங்களை விளாசியது.

இந்த ஓட்ட எண்ணிக்கை கவாஜா பக்கபலமாக இருந்தார். 246 பந்துகளில் அவர் 104 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சக வீரர் கேமரன் கிரீனும் 49 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் முகம்மது ஷமி 2 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜாவும் ரவிச்சந்திரன் அஸ்வினும் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிசும் இந்த முதல் நாள் ஆட்டத்தை நேரில் காண அரங்கிற்கு வந்திருந்ததால், இரு அணி வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்தது.