அமெரிக்கப் பொது விருதில் வென்று சாதனை படைத்தார் ஜோக்கோவிச்

அமெரிக்கப் பொது விருதில் வென்று சாதனை படைத்தார் ஜோக்கோவிச்

1 mins read
cedda2c5-a7c4-4765-8185-fec2d24cc682
அமெரிக்கப் பொது விருதை வென்ற செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச் கிண்ணத்துடன் தமது வெற்றியைக் கொண்டாடுகிறார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

நியூயார்க்: அமெரிக்கப் பொது விருதின் ஆண்களுக்கான இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச், ரஷ்யாவின் டேனில் மெட்வடேவை 6-3, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து 24 முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்ற ஆஸ்திரேலியாவின் முன்னாள் விளையாட்டாளர் மார்கரெட் கோர்ட்டின் சாதனையை ஜோக்கோவிச் சமன்செய்தார்.

அத்துடன், கிராண்ட் ஸ்லாம் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வென்ற ஆக வயதானவர் என்ற சாதனையையும் படைத்தார் 36 வயது ஜோக்கோவிச்.

மேலும், ஒரு பருவத்தில் மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை நான்காம் முறையாக வெற்றிகண்ட முதல் ஆட்டக்காரரும் அவரே.

இந்நிலையில், தாம் உண்மையிலேயே தமது குழந்தைப் பருவக் கனவை நனவாக்கியிருப்பதாக ஜோக்கோவிச் கூறியுள்ளார்.

இந்த விளையாட்டில் வரலாற்றுமிக்க சாதனையைப் படைப்பது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஒன்று என்றும் அதனை வார்த்தைகளில் சொல்வது கடினம் என்றும் அவர் கூறினார்.

தாம் ஏழு அல்லது எட்டு வயதில் இருந்தபோது உலகின் ஆகச் சிறந்த விளையாட்டாளராக வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.

அந்தக் கனவு தொடர்ந்து நனவாகிக் கொண்டிருப்பதாகவும் ஜோக்கோவிச் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்