பயர்ன் மியூனிக்கை வீழ்த்திய ஆர்சனல்

பயர்ன் மியூனிக்கை வீழ்த்திய ஆர்சனல்

1 mins read
ab2a1224-c015-4a86-8eed-0672c9fca0cd
ஆர்சனலின் முதல் கோலைப் போட்ட ஜுரியன் டிம்பர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்தின் ஆர்சனலும் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்கும் மோதின.

இதில் 3-1 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வெற்றி பெற்றது.

இப்பருவத்தில் பயர்ன் மியூனிக் முதல்முறையாகத் தோல்வியின் பிடியில் சிக்கியது.

இந்த ஆட்டம் புதன்கிழமை (நவம்பர் 26) நடைபெற்றது.

தோல்வி அடைந்ததால் பதற்றம் அடையத் தேவையில்லை என்று பயர்ன் மியூனிக்கின் நட்சத்திர ஆட்டக்காரரும் இங்கிலாந்துக் குழுவின் அணித் தலைவருமான ஹேரி கேன் தெரிவித்தார்.

எதிர்பார்த்ததைப் போலவே ஆட்டம் சவால்மிக்கதாக இருந்ததாக அவர் கூறினார்.

கேன், இப்பருவத்தில் இதுவரை 29 கோல்களைப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தோல்வி தங்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றும் இதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய உள்ளது என்றும் அவர் கூறினார்.

சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அடுத்தடுத்த சுற்றுகளில் ஆர்சனலைச் சந்திக்கும் சாத்தியம் இருப்பதாக கேன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்