40 வயதானாலும் தரவரிசையில் தலைவன்!

40 வயதானாலும் தரவரிசையில் தலைவன்!

1 mins read
aba08833-c9ca-4ed6-a6b5-ea5d2760769c
படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 4 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தார். அவரை இப்போது பின்னுக்குத் தள்ளி சாதித்துள்ளார் 40 வயதான ஆண்டர்சன்.

தற்போது இங்கிலாந்து அணி நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் சிறப்பாகப் பந்து வீசிய ஆண்டர்சன் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அது அவருக்கு சாதகமாக அமைய, முதலிடமும் கிடைத்தது.

2003ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வரும் ஆண்டர்சன் ஆறாவது முறையாக டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆண்டர்சன் இதுவரை 682 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் அவர் உள்ளார்.

வேகப் பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையும் ஆண்டர்சனுக்குத்தான்.

குறிப்புச் சொற்கள்