அதிரடியாக ஆடி வெற்றியை அறுவடை செய்த ஆஸ்திரேலியா

அதிரடியாக ஆடி வெற்றியை அறுவடை செய்த ஆஸ்திரேலியா

1 mins read
7fa78e58-6ab3-47d6-8277-fcace79694e9
ஆட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணியினருக்கு வாழ்த்து தெரிவிக்கும் இந்திய அணியினர். படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

இந்தூர்: இந்திய கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முதலிரு போட்டிகளைப் போலவே மூன்றாவது போட்டியும் மூன்றாவது நாளிலேயே முடிவிற்கு வந்தது.

வெற்றிக்கு 76 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், இன்று (03-03-2023) காலை ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது.

முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே உஸ்மான் கவாஜாவை வெளியேற்றினார் இந்திய அணியின் அஸ்வின்.

ஆனாலும், சற்றும் கலங்காத ஆஸ்திரேலிய அணி மளமளவென ஓட்டங்களைக் குவிக்கத் தொடங்கியது. இதனால், மேலும் விக்கெட்டை இழக்காமல் 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி வென்றது அவ்வணி.

டிராவிஸ் ஹெட் 49 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஷேன் 28 ஓட்டங்களையும் எடுத்தனர்.

முதல் இன்னிங்சில் இந்தியா 109 ஓட்டங்களையும் ஆஸ்திரேலியா 197 ஓட்டங்களையும் எடுத்தன. இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 163 ஓட்டங்களை எடுத்தது.

முதல் இன்னிங்சில் மூன்று, இரண்டாவது இன்னிங்சில் எட்டு என மொத்தம் 11 விகெக்ட்டுகளைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் ஆட்டநாயகனாகத் தேர்வானார்.

இதனையடுத்து, நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இந்தியா முன்னிலையில் இருக்கிறது. நான்காவது, கடைசி டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி வியாழக்கிழமை அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது.