பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்ட இந்தியா

பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்ட இந்தியா

1 mins read
0ddd600d-bddc-4b1c-86a7-43620ef6e1ff
-
Google News Preferred Icon

பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை இந்திய கிரிக்கெட் அணி தக்கவைத்துக்கொண்டது. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பார்டர்-கவாஸ்கர் கிண்ணத் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதலில் பந்தடித்த ஆஸ்திரேலியா 263 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 262 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், இந்திய அணியின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலியா 113 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

இதனால், 115 ஓட்ட இலக்குடன் களமிறங்கியது இந்தியா. இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 118 ஓட்டங்கள் எடுத்தது.

இதன்மூலம் இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 எனும் கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை இந்தியா தொடர்ச்சியாக நான்காவது முறையாக தக்கவைத்துக்கொண்டது.

தொடர்புடைய செய்திகள்