நடுவர்மீது கொலைவெறித் தாக்குதல்; பிரேசில் காற்பந்து வீரர் கைது

நடுவர்மீது கொலைவெறித் தாக்குதல்; பிரேசில் காற்பந்து வீரர் கைது

1 mins read
Google News Preferred Icon

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் காற்பந்து ஆட்டத்தின்போது நடுவரைத் தாக்கி, சுயநினைவை இழக்கச் செய்த ஆட்டக்காரர் ஒருவர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சாவ் பாவ்லோ விளையாட்டு மன்றம் - குவரானி ஆகிய குழுக்கள் மோதிய ஆறாம் நிலை லீக் ஆட்டம் கடந்த 4ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற்றது. அதன் இரண்டாம் பாதியின்போது, சாவ் பாவ்லோ குழுவின் வில்லியம் ரிபேரோ தப்பாட்டம் ஆடியதாக நடுவர் ரோட்ரிகோ கிரிவெலாரோ அறிவித்தார்.

இதனால் கோபடமடைந்த ரிபேரோ, நடுவரை இருமுறை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, உடனடியாக அவசர மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரோட்ரிகோ, சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார்.

Watch on YouTube

இதனால் ஆட்டம் 14 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. பின்னர் ரிபேரோ கைது செய்யப்பட்டார்.

இவ்வாண்டில் 113வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சாவ் பாவ்லோ விளையாட்டு மன்றம், சம்பவம் நிகழ்ந்த நாளைத் தனது வரலாற்றின் 'துயரம் மிகுந்த நாளாக' குறிப்பிட்டது.