அகண்ட நடைபாதை நெடுகிலும் வண்ணச்செடிகள், பளபளக்கும் கண்ணாடிச் சுவர்களுடன் சையது ஆல்வி சாலை - சிராங்கூன் சாலை சந்திப்பில் உயர்ந்து நிற்கும் 19 மாடி 'சென்ட்ரியம் ஸ்குவெர்'.
வி.கே.கல்யாணசுந்தரம், முஸ்தபா போன்ற பிரபலமான பெருங் கடைகள் பரபரப்பாக செயல்பட்ட ஐந்து மாடி சிராங்கூன் பிளாசா இருந்த இடத்தில் இந்த வர்த்தகக் கட்டடம், கொவிட்-19 தொற்றுக் காலத்தில் சத்தமே இல்லாமல் மடமடவென்று எழுந்தது.
143 அலுவலக இடங்கள், 49 சில்லறை வர்த்தகக் கடைகள், 39 மருத்துவ சேவைக்கான இடங்கள் ஆகியவற்றைக் கொண்ட இக்கட்டடத்தில் முதல் இரண்டு மாடிகளில் வர்த்தகக் கடை வளாகங்கள் அமைந்திருக்கின்றன.
ஐந்து மாடிக் கட்டடம் 19 மாடியாகி, பரப்பளவு கூடி, கடைகளுக்கான இடவசதி அதிகரித்து இருந்தாலும் இன்னும் இங்கு கடைகள் வரவில்லை.
செயல்படத்தொடங்கி ஓராண்டு ஆகிவிட்டநிலையில், தற்போது இங்கு 'டாலர்ஸ் அண்ட் சென்ட்ஸ்' எனும் வாசனைத் திரவியங்கள் விற்கும் கடையும் 'மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்' நகைக்கடை யுமே செயல்படுகின்றன.
இன்னும் அதிக கடைகள் திறக்கப்படும்போது, அதிக வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்ற எதிர்பாரப்பும் நம்பிக்கையும் இருப்பதாக 'மலபார் கோல்ட் அண்ட் டை மண்ட்ஸ்' நகைக் கடையின் மூத்த விற்பனை அதிகாரி திரு ராஜா முகம்மது, 38, கூறினார்.
நவம்பர் மாத இறுதிக்குள் 'ஜோய் ஆலுக்காஸ்' புதிய கிளை இங்கே திறக்கப்படும் என்றார் கடையின் சிங்கப்பூர் மேலாளர், திரு ஃபிரெட்டி, 40.
கடைகள் அதிகமாக இங்கு இயங்கவில்லை என்றாலும் அலு வலக இடங்கள் முழுமையாக பயன் படுத்தப்பட்டு வருவதாக இக்கட்டடத்தை நிர்வகிக்கும் 'எட்மண்ட் டை' நிறுவனத்தின் பொறியியல் மேற்பார்வையாளர் திரு ராஜ், 50, கூறினார்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் கிட்டத்தட்ட நீக்கப்பட்டுவிட்ட தாலும், தீபாவளி வருவதாலும் வாடிக்கையாளர்கள் தேடி வரலாம் என்று இங்குள்ள கடைக்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதே எதிர்பார்ப்புதான் லிட்டில் இந்தியா வட்டாரத்தின் அடுத்த முனையில் அமைந்துள்ள தேக்கா பிளேஸ்' கடைத்தொகுதியின் கடைக்காரர்களுக்கும் இருக்கிறது.
தேக்கா மார்க்கெட்டுக்கு எதிரே அமைத்துள்ள 'தேக்கா பிளேஸ்' மூன்றாவது முறையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 2003இல் கட்டப்பட்ட 'தேக்கா மால்', 2008இல் மேற் கொள்ளப்பட்ட பணிகளுக்கு பிறகு 'தி வெர்ஜ்' என்று மாறி, 2019இல் மேற்கொள்ளப்பட்ட மறுகட்டுமானப் பணி களுக்கு பிறகு 'தேக்கா பிளேஸ்' ஆகியுள்ளது.
உணவு, அழகுப் பராமரிப்புச் சேவைகள், உடைகள் விற்கும் கடைகள் ஆகிய பலதரப்பட்ட சேவைகளை வழங்கக்கூடிய கடைகள் இங்கு உள்ளன.
வாடகை ஓரளவு கட்டுப்பாடி யானாலும் வாடிக்கையாளர்கள் அதிகம் இல்லை என்பதே இங்குள்ள கடைக்காரர்கள் பலரது குறை.
"லிட்டில் இந்தியாவுக்கே உரிய தனித்தன்மையுடன் திகழும் ஈரடுக்குக் கடை வீடுகளில் அமைந்துள்ள பழையபாணி கடைகளும் பாதை ஓரக்கடைகளும் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலமாக பழக்கப்பட்டவை.
மேலும் அவை சாலை ஓரத்தில் இருப்பதால் நடக்கும்போதே கண்ணில்படுகின்றன. கடைக்குச் செல்லும் திட்டமில்லாவிட்டாலும் எட்டிப் பார்க்க வைக்கின்றன.
"இங்குள்ள சேவைகளே பெரும்பாலும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பல மாடி கடைத்தொகுதிகளில் உள்ள கடைகளிலும் கிடைக்கின்றன," என்றார் துணைப்பாட ஆசிரியர் வசந்தா, 56.
"தற்போது சிங்கப்பூர் எங்கும் இத்தகைய குளிரூட்டப்பட்ட, வசதி கள் நிறைந்த நவீன கடைத்தொகு திகள் இருக்கின்றன.
"உள்ளூர் மக்களும் சுற்றுப் பயணிகளும் தேக்காவுக்கு வருவது பாரம்பரிய இந்தியப் பொருட்களை வாங்கவும் புருவம் திருத்துவது, மருதாணி போடுவது போன்ற சேவைகளை பெறுவதற்கும் இந்திய உணவை உண்பதற்கும்தான். நவீன கடைத்தொகுதி அனுபவத்தை இங்கு பலரும் நாடுவதில்லை," என்றார் அவர்.
"பழக்கம், தனித்தன்மையான பொருள், சிறப்பு சேவை, கட்டண சலுகை போன்ற காரணங்களே வாடிக்கையாளர்களை இக்கடை களுக்கு அதிகம் ஈர்க்கக்கூடும்," என்று குறிப்பிட்டனர் வாடிக்கையாளர்கள் பலர்.

