வரும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி, திரு ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் (படம்), வெளியுறவு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சராகப் பொறுப்பேற்பார்.
திட்டமிட்டதற்கு ஒரு மாதம் முன்பே அவர் துணை அமைச்சராகப் பொறுப்பு ஏற்கவுள்ளார். முன்னதாக, பிப்ரவரி ஒன்றாம் தேதி அவர் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.
எனினும், திட்டமிட்டதற்கு முன்னதாகவே திரு ஸூல்கர்னைன் தமது சொந்த வேலையிலிருந்து விலகியுள்ளதால் பொறுப்பு ஏற்பு தற்போது முன்னரே கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அறிக்கையில் தெரிவித்தது.
திரு ஸூல்கர்னைன், ‘டென்டன்ஸ் ரோட்ரிக்ஸ் லிட்டிகேஷன் அண்ட் டிஸ்பியுட் ரெசலியூஷன்’ (Dentons Rodyk’s Litigation and Dispute Resolution) சட்ட நிறுவனத்தின் மூத்த பங்குதாரராகப் பொறுப்பு வகிக்கிறார்.

