சிங்கப்பூரில் அக்டோபர் 14ஆம் தேதி யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி

சிங்கப்பூரில் அக்டோபர் 14ஆம் தேதி யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி

1 mins read
01d27321-8649-4ebf-982b-5d4e3629fbaf
படன்: டுவிட்டர்/ யுவன் சங்கர் ராஜா -
Google News Preferred Icon

சிங்கப்பூர் மக்களை வரும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி இசைமழையில் நனைக்கவுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

நிகழ்ச்சியை நடத்தும் மேஸ்ட்ரோ புரொடக்சன்ஸ் நிறுவனம் தனது சமூக ஊடகப் பக்கங்கள் வழியாக வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 14) அன்று தகவல் வெளியிட்டது.

நிகழ்ச்சி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கும். நுழைவுச் சீட்டு விற்பனைக்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் முதன்முறையாக யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சி படைக்கவுள்ளார்.

கடந்த மாதம் மேஸ்ட்ரோ புரொடக்சன்ஸ், இசையமைப்பாளர் அனிருத்தை வைத்து மாபெரும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
இசைஅனிருத்சிங்கப்பூர்