கொண்டோமினிய வீடுகளுக்காக முக்கியப் பகுதியில் விற்பனைக்கு விடப்படும் இரு இடங்கள்

கொண்டோமினிய வீடுகளுக்காக முக்கியப் பகுதியில் விற்பனைக்கு விடப்படும் இரு இடங்கள்

1 mins read
c25779d2-b2e7-4d48-9260-cc90b049cad5
விற்பனைக்கு விடப்படவுள்ள இரு இடங்களில் ஒன்றான மோரிசன் லேன். - படம்: சாவ்பாவ்

சிசிஆர் எனப்படும் மத்திய முக்கியப் பகுதியில் கொண்டோமினிய வீடுகள் அமைப்பதற்காக இரு இடங்களை நகர மறுசீரமைப்பு ஆணையம் விற்பனைக்கு விட்டுள்ளது.

அவ்விடங்களில் ஒன்று ஹாலந்து பிளெய்னிலும் மற்றொன்று ராபர்ட்சன் கீயிலும் அமைந்துள்ளன. இவ்வாண்டு முற்பாதிக்காக, அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் அவ்விடங்கள் புதன்கிழமை (பிப்ரவரி 25) விற்பனைக்கு விடப்பட்டன.

கடந்த ஆண்டில் மத்திய முக்கியப் பகுதியில் இடம்பெற்ற புதிய திட்டங்கள் நன்கு விற்பனையாயின. அதனால் ஹாலந்து பிளெய்னுக்காக நான்கிலிருந்து ஆறு ஒப்பந்தப்புள்ளிகள் முன்வைக்கப்படும் என்று கவனிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

காப்புப் பட்டியலில் (reserve list) சேர்க்கப்பட்டு இப்போது வெளியிடப்பட்டுள்ள, ரிவர் வேலியில் உள்ள மோரிசன் லேன் பகுதியும் விற்பனைக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் இடங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள், அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தேவையான குறைந்தபட்ச மதிப்பில் இருக்கவேண்டும்.

ஹாலந்து பிளெய்ன், சென்ற ஆண்டு விற்கப்பட்ட ஹாலந்து லிங்க் நிலத்துக்கு அருகே அமைந்துள்ளது. ஹாலந்து பிளெய்னில் 15,716.9 சதுர மீட்டர் பரப்பளவில் 280 தனியார் வீடுகளை அமைக்க முடியும்.

மோரிசன் லேன் பகுதியில் 205 வீடுகளை அமைக்க முடியும்.

குறிப்புச் சொற்கள்