மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல்: இருவர் காயம்

மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல்: இருவர் காயம்

1 mins read
95d1f112-5c93-4ded-a74d-ab7ec6e0e041
மோட்டார்சைக்கிளோட்டியும் வேனில் இருந்த ஒரு பயணியும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

உட்லண்ட்ஸ் அவென்யூ 6ல் நேர்ந்த மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

திங்கட்கிழமை (மார்ச் 9) இரவு 10.45 மணியளவில் வேன், கார், மோட்டார்சைக்கிள் ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற 23 வயது இளையரும் வேனில் இருந்த 13 வயதுச் சிறுமியும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அது கூறியது.

அவர்களில் ஒருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும் மற்றவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

32 வயதான வேன் ஓட்டுநர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.

இரவு வேளையில் நேர்ந்த இவ்விபத்து இருவழிச் சாலைப் போக்குவரத்தைப் பாதித்தது. இதனால், பாதிக்கப்பட்ட சாலையில் இயக்கப்பட்ட பேருந்துச் சேவைகள் வேறு பாதைக்குத் திருப்பிவிடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்