துவாஸ் ஆலை வெடிப்பு: பொது மேலாளருக்கு $145,000 அபராதம்

துவாஸ் ஆலை வெடிப்பு: பொது மேலாளருக்கு $145,000 அபராதம்

2 mins read
8a117669-e0b1-4b18-95ae-94ea34b7fb54
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் இங் வா யோங்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

2021ஆம் ஆண்டில் துவாஸ் வட்டாரத்தில் உள்ள ஆலையில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக இரண்டு ஊழியர்கள் மாண்டனர்.

தேசிய சுற்றுப்புற வாரியத்துக்குச் சொந்தமான அந்த ஆலையின் பொது மேலாளரான 56 வயது இங் வா யோங்கிற்கு வியாழக்கிழமையன்று (நவம்பர் 20) $145,000 அபராதம் விதிக்கப்பட்டது.

வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் இங்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றச்சாட்டை இங் ஒப்புக்கொண்டார்.

துவாஸ் ஆலை வெடிப்பு தொடர்பான விவகாரத்தில் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 18) தேசிய சுற்றுப்புற வாரியத்துக்கு $230,000 அபராதம் விதிக்கப்பட்டது.

வாரியத்தைச் சேர்ந்த இன்னோர் அதிகாரியான 50 வயது கிறிஸ்டஃபர் லீ யூ பின் தொடர்பான வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடல் நவம்பர் 28ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

இங் மீது சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டை லீ எதிர்நோக்குகிறார்.

சம்பந்தப்பட்ட ஆலையின் பொது மேலாளராக இங் 2018ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

விசைப்பெட்டியின் பாதுகாப்பு அம்சத்தில் ஏற்பட்ட மிக அரிதான பழுது காரணமாக திடீர் வெடிப்பு ஏற்பட்டது என இங்கின் வழக்கறிஞர் ஸ்டெஃபானியா வோங் வாதிட்டார்.

அந்தப் பழுதின் காரணமாக சம்பவம் நிகழ்ந்த நாளன்று மின்சுற்று இணைப்பைத் துண்டிக்கும் சாதனம் செயல்படவில்லை என்றார் அவர்.

ஆனால் பேரளவிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் அந்த விசைப்பெட்டியை விதிமுறைக்கு உட்பட்டு இயக்க உரிமம் பெற்ற மின்சாரத்துறை ஊழியரை இங் நம்பியிருந்ததாக அவர் கூறினார்.

இருப்பினும், தற்காப்பு வழக்கறிஞரின் வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்தார்.

வெடிப்பு ஏற்பட்டதற்கு பாதுகாப்பை உறுதிசெய்ய தேசிய சுற்றுப்புற வாரியம் தவறியதும் காரணம் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
வெடிப்புஅபராதம்தேசிய சுற்றுப்புற வாரியம்வழக்கு

தொடர்புடைய செய்திகள்