டொரோன்டோ திரைப்பட விழாவில் மூன்று சிங்கப்பூர் படங்கள்

டொரோன்டோ திரைப்பட விழாவில் மூன்று சிங்கப்பூர் படங்கள்

1 mins read
a908056b-5897-4cf8-b85c-3537ebd0a42e
ஏன்டனி சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வீ ஆர் ஆல் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’. - படம்: ஜிராஃப் பிக்சர்ஸ்
multi-img1 of 3
Google News Preferred Icon

சிங்கப்பூரைச் சேர்ந்த இயக்குநர்களின் கைவண்ணத்தில் உருவான மூன்று திரைப்படங்கள் இவ்வாண்டின் டொரோன்டோ அனைத்துலகத் திரைப்பட விழாவில் (டிஐஎஃப்எஃப்) திரையிடப்படவுள்ளன.

‘வீ ஆர் ஆல் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’, ‘ஆ கர்ல்’, ‘த வயலனிஸ்ட்’ ஆகிய மூன்று படங்களும் முதன்முறையாக வட அமெரிக்கக் கண்டத்தில் திரையிடப்படவுள்ளன. டிஐஎஃப்எஃப் விழாவின் சென்டர்பீஸ் எனும் அங்கத்தில் அவை இடம்பெறுகின்றன.

‘வீ ஆர் ஆல் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ படத்தை ஏன்டனி சென் இயக்கியுள்ளார். ‘ஆ கர்ல்’லின் இயக்குநர் ஆங் கெக் கெக். சிங்கப்பூரைச் சேர்ந்த எர்வின் ஹான், ஸ்பெயினைச் சேர்ந்த ராவுல் கர்சியா இருவரும் இணைந்து ‘த வயலனிஸ்ட்’ உயிரோவியத் திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.

50 நாடுகளைச் சேர்ந்த 54 திரைப்படங்கள் டொரோன்டோ திரைப்பட விழாவில் இடம்பெறுகின்றன. அவற்றில் இந்த மூன்றும் அடங்கும்.

டிஐஎஃப்எஃப் விழாவில் இடம்பெறும் சென்டர்பீஸ் எனப்படும் அங்கம் அனைத்துலகத் திரைப்படங்களைக் வெளிக்காட்டும் முக்கிய அங்கமாகும். நல்ல விமர்சனங்களைப் பெற்ற, மற்ற திரைப்பட விழாக்களில் இடம்பெற்ற படங்கள் உள்ளிட்டவை அதில் இடம்பெறும்.

‘வீ ஆர் ஆல் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ சிங்கப்பூர் திரையரங்குகளில் இம்மாதம் 20ஆம் தேதி முதல் திரையிடப்படும். ‘த வயலனிஸ்ட்’ வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் திரையிடப்படும். ‘ஆ கர்ல்’ இவ்வாண்டு இறுதியில் திரையிடப்படவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்திரைப்படம்இயக்குநர்விழா

தொடர்புடைய செய்திகள்