காப்பிக்கடையில் தீ; மூவருக்குக் காயம்

1 mins read
f7f03956-594c-4955-9d5a-5e278b2a4306
ஹவ்காங் சென்டரல், புளோக் எண் 805ன் முதல் தளத்தில் அமைந்திருக்கும் காப்பிக்கடை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. - படம்:எஸ்பிஎச்

ஹவ்காங்கில் உள்ள ஒரு காப்பிக்கடையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

இந்தத் தீ விபத்தால் அந்தக் காப்பிக்கடை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

ஹவ்காங் சென்டரல், புளோக் எண் 805ன் முதல் தளத்தில் அமைந்திருக்கும் காப்பிக்கடை ஒன்றில் தீ மூண்டதாக தங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.40 மணிக்குத் தகவல் கிடைத்தது எனச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

மேலும், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அந்தக் காப்பிக் கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் தீயை அணைத்து விட்டார் என அது கூறியது.

இந்தத் தீ விபத்தில் மூவர் காயமடைந்ததாகவும் அவர்களில் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் மற்ற இருவரும் செங்காங் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்