விளையாட்டுப் பரிசு இயந்திரத்தில் திருட்டு: தந்தை, மகன் மீது காவல்துறையில் புகார்

விளையாட்டுப் பரிசு இயந்திரத்தில் திருட்டு: தந்தை, மகன் மீது காவல்துறையில் புகார்

1 mins read
521bf3d8-0a2a-406b-9a7c-835c157facd9
சிசிடிவி கண்காணிப்புக் கருவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. - படம்: டிக்டாக்/ஷின் மின்
Google News Preferred Icon

விளையாட்டுப் பரிசை வழங்கும் ‘கிளாவ் மெஷின்’ என்னும் இயந்திரத்திற்குள் இருந்து பரிசுப் பொருள்களைத் திருடியதாக ஆடவர் மற்றும் அவரது மகன் மீது அந்த இயந்திரத்தை நடத்துபவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அவ்விருவரும் அந்த இயந்திரத்தைக் குலுங்குவதும் அப்போது கீழே விழுந்த பரிசுப் பொருள்களைத் திருடியதும் கண்காணிப்புக் கருவியில் பதிவானது.

அதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை (ஜூலை 25) நிகழ்ந்த அந்தச் சம்பவம் பற்றி புகார் அளிக்கப்பட்டது.

அப்பர் சிராங்கூன் கடைத்தொகுதியின் முதல் மாடியில் உள்ள ‘ஃபார்ச்சூன்கிளாவ்’ என்னும் விளையாட்டுப் பரிசுப் பொருள் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களில் பிற்பகல் 1.36 மணிக்கு அந்தத் திருட்டு நடைபெற்றது எனப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சாவ்பாவ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஒரு பரிசு இயந்திரத்தின்மீது வைக்கப்பட்டிருந்த கேமரா உடைக்கப்பட்டிந்ததைத் தாம் கண்டதாக ஃபாங், 35, எனப்படும் அந்த இயந்திரத்தை நடத்துபவர் கூறியதாக அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

அதனால், என்ன நடந்தது என்பதை அறிய அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்புக் கருவியில் பதிவானதைக் காண வேண்டி இருந்ததாக அவர் கூறினார்.

காவல்துறையில் புகார் அளித்த கையோடு, திருட்டுச் சம்பவம் தொடர்பான காணொளியை இணையத்தில் பதிவேற்றி, பரிசு இயந்திரத்தை நடத்தும் மற்றவர்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார் அவர்.

இந்நிலையில், புகார் பெறப்பட்டதை உறுதி செய்த காவல்துறை, விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்