சிங்கப்பூர் அணி 50 தங்கப்பதக்கங்களைக் குறிவைத்து களமிறங்குகிறது

சிங்கப்பூர் அணி 50 தங்கப்பதக்கங்களைக் குறிவைத்து களமிறங்குகிறது

1 mins read
3cb227d5-3df1-463d-b41a-9396aafa2ab7
படம்: SSA -
Google News Preferred Icon

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் கம்போடியாவில் தொடங்கிவிட்டன.

போட்டி அதிகாரபூர்வமாக மே 5ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடக்கிறது.

இம்முறை சிங்கப்பூர் அணி 50 தங்கப்பதக்கங்களை வெல்ல திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூர் அணி இம்முறை 30 விளையாட்டுகளில் பங்கேற்கிறது, 558 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

இம்முறையும் நீச்சல் போட்டிகளில் சிங்கப்பூர் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேசைப்பந்து, வால்வீச்சு போன்ற விளையாட்டுகளிலும் சிங்கப்பூர் பதக்கங்களைக் குவிக்க முயலும்.

2015ஆம் ஆண்டு சிங்கப்பூர் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்தியது. அதில் 84 தங்கப்பதக்கங்களை அதுவென்றது.

இந்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் சிறந்த அடித்தளமாக இருக்கக்கூடும்.