அங் மோ கியோவில் தலைகீழாகக் கவிழ்ந்த டாக்சி

அங் மோ கியோவில் தலைகீழாகக் கவிழ்ந்த டாக்சி

1 mins read
e2201b6b-84c8-462e-926a-d8aa475d745b
தலைகீழாகக் கவிழ்ந்த ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ டாக்சி.  - படம்: எஸ்பிஎச் மீடியா
Google News Preferred Icon

சீனப் புத்தாண்டு முதல் நாளான செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) காலை நேர்ந்த சாலை விபத்தில் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ டாக்சி ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்தது.

அங் மோ கியோ அவென்யூ 1க்கும் பீஷான் ரோடுக்கும் இடையிலான சாலை சந்திப்பில் நடந்த விபத்து குறித்து காலை 7.50 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இருவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகவும் அது தெரிவித்தது.

சீன நாளிதழான லியான்ஹ சாவ்பாவ் வெளியிட்ட படங்களில், அவசர மருத்துவ வாகனம் ஒன்றும் சில காவல்துறை அதிகாரிகளும் டாக்சிக்கு அருகில் இருப்பதைக் காணமுடிந்தது.

சாலையோரத்தில் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் இருவர் ஆடவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.

மேல்விவரங்களுக்கு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம், காவல்துறையையும் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ நிறுவனத்தையும் தொடர்புகொண்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்