மே மாதக் கவிமாலைச் சந்திப்பில் புனிதா கணேசன்

மே மாதக் கவிமாலைச் சந்திப்பில் புனிதா கணேசன்

1 mins read
f2cad082-a8b8-4cc5-b744-ad0adc327538
படம்: - தமிழ் முரசு
Google News Preferred Icon

சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள் மற்றும் கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை ஒவ்வொரு மாதமும்  கடைசி சனிக்கிழமை மாதாந்திரச் சந்திப்பினை நடத்தி வருகிறது. 

கவிமாலையின் 288ஆவது  மேமாதச் சந்திப்பு இம்மாதம் 25ஆம் தேதி  சனிக்கிழமை  மாலை 6 மணிக்கு தேசிய நூலகம், தளம் 1, ‘த புரோகிராம்’ அறையில் நடைபெறவிருக்கிறது.    கவிமாலையின் இம்மாதச் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூரில் பாரத் கல்விக் குழுமத்தின் செயலர் மற்றும் உரிமையாளருமான திருமதி புனிதா கணேசன் கலந்துகொள்ளவிருக்கிறார். 

இவர் எழுத்தாளர், பேச்சாளர், நிர்வாகி, பொதுப்பணி ஆர்வலர், கல்வியாளர் என பல்வகைத் திறன் கொண்டவர்.  திருமதி புனிதா கணேசனுடன் கலந்துரையாடலும் இடம்பெறவிருக்கிறது.  அத்துடன் சிறப்பு வருகையாளர் திருமதி கோகிலா சுந்தர்ராஜன் ‘தமிழும் இசையும்’ என்ற தலைப்பிலான சிற்றுரையும் உண்டு.   நிகழ்ச்சியை கவிஞர் சரஸ்வேல் வழிநடத்த, “அன்புள்ள அம்மாவிற்கு” எனும் தலைப்பில் மே மாதப் போட்டிக் கவிதைகள் வாசித்தல், கவிதை விமர்சனம் மற்றும் பரிசளிப்பு நடைபெறவுள்ளது.   ஜூன் மாதக் கவிதைப் போட்டிக்கவிதைக்கான தலைப்பு ‘இறைவன் என்றொரு கவிஞன்’. இப்போட்டிக்கு 16 வரிகளுக்கு மிகாமல் உங்கள் கவிதையை ஜூன் 23ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். இப்போட்டிக்கு மரபுக்கவிதை, புதுக்கவிதை அல்லது நவீன கவிதையை அனுப்பலாம்.

சிங்கப்பூரில் முறையான அனுமதிபெற்ற எவரும் இப்போட்டியில் பங்கெடுக்கலாம். உங்களின் போட்டிக் கவிதைகளை https://tinyurl.com/Poem-Submission-URL என்ற தொடுப்பின் வழியாக கூகல் ஃபார்ம் மூலமாகவோ அல்லது  poems@kavimaalai.com என்ற மின்னஞ்சலிலோ அனுப்பலாம். மின்னஞ்சலில் உங்களது கவிதையை இணைப்பாகச் சமர்ப்பிப்பதாக இருந்தால் தயவுசெய்து Word ஃபைலாக அனுப்பவும். தயவுசெய்து PDF format -இல் இணைக்க வேண்டாமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  கவிமாலையின் மாதாந்திரச் சந்திப்பு நிகழ்விற்கு அனுமதி இலவசம். கவிதையின் மீது ஆர்வமுடைய அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.  தொடர்புக்கு 9022 4056.

குறிப்புச் சொற்கள்