புலாவ் புக்கோம், ஜூரோங் தீவில் உள்ள சொத்துகளை விற்கும் ஷெல் நிறுவனம்

புலாவ் புக்கோம், ஜூரோங் தீவில் உள்ள சொத்துகளை விற்கும் ஷெல் நிறுவனம்

1 mins read
43b73897-ff7b-4f9a-b00a-89c5de7778c3
விற்கப்படும் சொத்துகளில் புலாவ் புக்கோமில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு ஆலையும் அடங்கும். - படம்: ராய்ட்டர்ஸ்

எரிபொருள் நிறுவனமான ‘ஷெல்’ சிங்கப்பூரின் புலாவ் புக்கோம், ஜூரோங் தீவு ஆகிய இடங்களில் அதற்கு இருக்கும் சொத்துகளை விற்கிறது.

அந்தச் சொத்துகளை இந்தோனீசியாவின் சந்திரா அஸ்‌ரி கெப்பிட்டலும் கிளென்கோ நிறுவனமும் இணைந்து வாங்குகின்றன.

விற்கப்படும் சொத்துகளில் சிங்கப்பூரின் முதல் எரிபொருள் சுத்திகரிப்பு ஆலையும் அடங்கும். அது 1961ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

உலகளாவிய நிலையில் கரிம வெளியேற்றத்தை குறைக்கவும் ஒட்டுமொத்த லாபத்தை அதிகரிக்கவும் இந்தச் சொத்துகளை பிரிட்டனை மையமாகக் கொண்ட ஷெல் நிறுவனம் 2023ஆம் ஆண்டில் உத்திபூர்வ மறுஆய்வின்கீழ் கொண்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து அவை விற்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்