போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது: அமைச்சர் சண்முகம்

போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது: அமைச்சர் சண்முகம்

1 mins read
சிங்கப்பூரிலும் இவ்வட்டாரத்திலும் மேற்கொண்ட கருத்தாய்வில் அதுவே பொருத்தமான தண்டனை எனக் கருத்துரைப்பு
37604846-f866-443e-ad70-b8ba765a90de
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், மே 8 ஆம் தேதி, அமைச்சர்நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட்டுப் பேசினார். - படம்: கவ்.எஸ்ஜி
Google News Preferred Icon

சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வுகளில் போதைப்பொருள் கடத்துவோருக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்திருப்பதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

மே 8 ஆம் தேதி, போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான சிங்கப்பூரின் அணுகுமுறை குறித்த அமைச்சர்நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் அவர் வெளியிட்டார்.

2023ல் உள்துறை அமைச்சு நடத்திய கருத்தாய்வில் பங்குபெற்ற 69 விழுக்காட்டினர் போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதே பொருத்தமானது என்பதை ஏற்றுக்கொள்வதாகவோ வலுவாக ஆதரிப்பதாகவோ தெரிவித்தனர்.

2021ல் இந்த விகிதம் 66 விழுக்காடாக இருந்ததைச் சுட்டிய அமைச்சர் சண்முகம், இவ்வாண்டுப் பிற்பகுதியில் இக்கருத்தாய்வின் முழு அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

இவ்வட்டாரத்தின் பிற நாடுகளில் நடத்தப்பட்ட இந்தக் கருத்தாய்வில், 87 விழுக்காட்டினர், மரணதண்டனை விதிப்பதால் போதைப்பொருள் கடத்தல் தடுக்கப்படுவதாகக் கூறியதை அமைச்சர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மரண தண்டனைஆதரவுஆய்வுகா சண்முகம்