புதிய ‘எம்பிரேயர்’ விமானத்தைப் பெற்ற ஸ்கூட்

புதிய ‘எம்பிரேயர்’ விமானத்தைப் பெற்ற ஸ்கூட்

1 mins read
5ad83b07-3754-4c7c-bc5a-650b9526198f
புதிய விமானத்தை ஸ்கூட் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் சடங்கு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

பிரேசிலின் எம்பிரேயர் நிறுவனம் தயாரித்துள்ள விமானங்களை சிங்கப்பூரின் ஸ்கூட் நிறுவனம் வாங்கியிருந்தது. அந்தப் ஒன்பது புதிய விமானங்களில் முதல் விமானம் ஸ்கூட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அந்த விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஸ்கூட் 14 மாதங்களுக்கு முன்பு கையெழுத்திட்டது. அந்த E190-E2 ரக விமானச் சேவை மே மாதம் ஏழாம் தேதியன்று தொடங்கும். அன்றைய தினம் அது சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்தின் கிராபிக்குப் பயணம் மேற்கொள்ளும்.

முதன்முறையாக சிங்கப்பூர் பயன்படுத்தும் விமானங்களில் எம்பிரேயர் நிறுவனம் உற்பத்தி செய்த விமானங்கள் சேர்க்கப்படுகின்றன.

புதிய விமானத்தை ஸ்கூட்டிடம் ஒப்படைப்பதற்கான சடங்கு வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 11) பிரேசிலின் சாவ் ஜோசே டொஸ் கம்பொஸ் நகரில் உள்ள எம்பிரேயர் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.

புதிய விமானத்தை முதன்முறையாகப் பார்வையிட ஸ்கூட் தலைமை நிர்வாக அதிகாரி லெஸ்லி துங், அந்நிறுவனத்தின் இதர மூத்த அதிகாரிகள் ஆகியோர் இவ்வாரத் தொடக்கத்தில் பிரேசில் சென்றனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஸ்கூட்விமானம்பயணம்