1,000 வெள்ளி கள்ள நோட்டைப் பயன்படுத்திய ஆடவருக்குச் சிறை

1,000 வெள்ளி கள்ள நோட்டைப் பயன்படுத்திய ஆடவருக்குச் சிறை

1 mins read
cce031cd-417d-47e6-952b-caa9430cd6a9
காலித் 1,000 வெள்ளி கள்ள நோட்டைப் பயன்படுத்தி 400 வெள்ளி மதிப்புள்ள இருமல் மருந்துகளை வாங்கியுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

காலித் அப்துல்லா என்னும் 34 வயது ஆடவர் இணைய வர்த்தகரிடம் சட்டவிரோதமாக இருமல் மருந்து வாங்கியுள்ளார். மேலும் மருந்திற்காக அவர் 1,000 வெள்ளி கள்ள நோட்டைப் பயன்படுத்தியுள்ளார்.

அவர் மீதான குற்றங்கள் ஏப்ரல் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. ஆடவருக்கு 2 ஆண்டுகள் 10 மாதச் சிறைத்தண்டனையும் 3,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மோசடி சம்பவம் 2022 மார்ச் மாதம் நடந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

காலித் முதலில் மருத்துவரிடம் சென்று தூக்கத்திற்காக இருமல் மருந்துகள் வேண்டும் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவர் அதைத் தர மறுத்துவிட்டார். அதனால் காலித் மருத்துவரை அச்சுறுத்தியும் உள்ளார்.

அதன் பின்னர் ஆடவர் டிபிஎஸ் வங்கிக்குச் சென்று போலியான ஆறு 1,000 வெள்ளி கள்ள நோட்டுகளை வெளிநாட்டு பணமாக மாற்ற முயற்சி செய்துள்ளார். அந்த கள்ள நோட்டுகளை காலித் இணையத்தில் வாங்கியுள்ளார்.

அக்டோபர் மாதம் காலித் 1,000 வெள்ளி கள்ள நோட்டைப் பயன்படுத்தி 400 வெள்ளி மதிப்புள்ள இருமல் மருந்துகளை உரிமம் இல்லாத வர்த்தகரிடம் வாங்கியுள்ளார்.

அதைத்தொடர்ந்து காலித் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் 18,500 வெள்ளி பெறுமானமுள்ள கள்ள நோட்டுகள் இருந்தன.

குறிப்புச் சொற்கள்
குற்றம்சிறைமோசடி