தங்கைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்த ஆடவருக்குச் சீர்திருத்தப் பயிற்சி

தங்கைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்த ஆடவருக்குச் சீர்திருத்தப் பயிற்சி

1 mins read
09996084-fa2c-4c7b-9b37-45775a62678a
குற்றம் புரிந்த இளையர் $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சீர்திருத்தப் பயிற்சியைத் தொடங்க அவர் ஏப்ரல் 26ஆம் தேதியன்று அரச நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: இணையம்
Google News Preferred Icon

தமது இரண்டு தங்கைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய இளையருக்குச் சீர்திருத்தப் பயிற்சி விதிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் குற்றத்தை அவர் முதன்முதலில் 2018ஆம் ஆண்டில் புரிந்தார்.

அப்போது அவருக்கு வயது 12.

அப்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 வயது.

2019ஆம் ஆண்டில் அச்சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.

2020ஆம் ஆண்டுக்கும் 2021 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இன்னொரு தங்கையை அவர் மூன்று முறை மானபங்கம் செய்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளத்தைக் காக்க அவர்களது பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றம் புரிந்த இளையர் குறைந்தது ஓராண்டுக்குச் சீர்திருத்தப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று மார்ச் 6ஆம் தேதியன்று உத்தரவிடப்பட்டது.

அந்த இளையர் $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சீர்திருத்தப் பயிற்சியைத் தொடங்க அவர் ஏப்ரல் 26ஆம் தேதியன்று அரசு நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
குற்றம்