தமக்கு ஏற்பட்ட நிதிப் பிரச்சினைக்குத் தமது காதலிதான் காரணம் எனும் எண்ணம் எழுந்ததாலும் அவர் வேறொருவருடன் தொடர்பு வைத்திருப்பதாகச் சந்தேகப்பட்டதாலும் அப்பெண் மீது 62 வயது லிம் சோங் சுவா அமிலம் ஊற்றியதுடன் அரிவாளால் அவரைப் பலமுறை வெட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
காதலியுடன் சேர்ந்து தாமும் மரணமடைய கிட்டத்தட்ட 20 தூக்க மாத்திரைகளை லிம் உட்கொண்டார்.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட லிம்முக்கு பிப்ரவரி 20ஆம் தேதியன்று நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தாக்குதல் காரணமாக 51 வயது திருவாட்டி ஹெங் ஹுவீ சேவின் கண்கள், முதுகு ஆகியவை சிதைந்துள்ளன. அவரது இரு கரங்களிலும் வெட்டுக் காயங்கள் உள்ளன.
திரு லிம் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

